கோட் – சூட் ‘கட்டாய நடைமுறை ஜனாதிபதியால் ரத்து!

அரச உயர் அதிகாரிகள் முக்கிய நிகழ்வுகளின் போது கோட் சூட் அணியும் வழக்கம் கட்டாயமாக்கப்பட்ட உத்தரவை ரத்துச் செய்துள்ளார் ஜனாதிபதி.

1991ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட உத்தரவினைப் பின்பற்றும் அதிகாரிகள் இரவு 11.30 மணிக்கும் அவ்வாறே கோட் சூட் அணிந்திருப்பதைக் காணக்கூடியதாக இருப்பதாகவும் நமது நாட்டு காலநிலைக்கேற்ப ஆடையணிவதே பொருந்தக் கூடிய கலாச்சாரம் எனவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி, 26 வருடங்கள் அமுலில் இருந்த விதிமுறையை ரத்துச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது