நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவுகணை; பாக். சோதனை வெற்றி!

நீர்மூழ்கிக் கப்பலிலிருநது அணு ஆயுத பலத்துடன் ஏவக்கூடிய Babur-3 ஏவுகணையை வெற்றிகரமாக முடித்துள்ளதாக அறிவித்துள்ளது பாகிஸ்தான்.

450 கி.மீ வரை சென்று இலக்கைத் தாக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள குறித்த ஏவுகணை பாக் இராணுவத்தின் தொழிநுட்ப முன்னேற்றத்தை எடுத்துக் காட்டுவதாக பிரதமர் நவாஸ் ஷரீப் தெரிவித்துள்ளார்.

இது போன்றவொரு ஏவுகணை இந்தியாவால் 2008ம் ஆண்டு பரிசோதிக்கப்பட்டிருந்த நிலையில் இரு நாடுகளுக்கிடையில் நிலவும் பதட்டத்தின் மத்தியில் இன்றைய ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளது.