மியன்மார் முஸ்லிம்களின் துயரநிலை: இலங்கை முஸ்லிம்களுக்கு தெளிவான செய்தி

சுமார் 57 வருடங்களுக்கு முன் 1961ல்மௌலானா அப்துல் ஹஸன் நத்வி மியன்மாரில் நிகழ்த்திய ஒரு  உரையில் ரோஹிங்யா முஸ்லிம்களைப் பார்த்து நீங்கள் இறைவனின்தை பாக்கு திரும்பிவிடுங்கள் இல்லையேல் முன்னொரு போதும் இல்லாத விளைவுகளை நீங்கள் அனுபவிக்கவேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கை பெரும்பாலும் பலித்துள்ளதாகவே இப்போது எண்ணத் தோன்றுகின்றது. ரோஹிங்யா முஸ்லிம்கள் இன்று ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்படுகின்றனர். ஆண், பெண், சிறுவர், முதியோர் வயது மற்றும் பால் பேதம் இன்றி மக்கள் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுகின்றனர். கொன்று குவிக்கப்படுகின்றனர். முஸ்லிம் நாடுகள் உட்பட முழு உலகும் இந்தக் கொடுமைகளை இன்னமும் கண்டும் காணாமல் உள்ளன.

இலங்கையில் பாஸிஸ சக்திகளின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், மியன்மாரின் கசாப்புக் கடைக்காரன் விராத்து தேரரின் ஒத்துழைப்போடு இந்த சக்திகள் செயற்பட்டு வருகின்ற நிலையில் இலங்கை முஸ்லிம்களுக்கு மியன்மார் நிலை ஒரு தெளிவான செய்தியாகவே உள்ளது. மகிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் பொது பல சேனா அமைப்பு விராத்து தேரருடன் பேணிய உறவு அவருடன் செய்துகொண்ட ஒப்பந்தம் என்பன இங்கே நினைவூட்டத்தக்கவை.

மியன்மார் முஸ்லிம்கள் மீதான அண்மைக்கால தாக்குதல் 2016 அக்டோபரில் தொடங்கியது. ஏற்கனவே அங்கே வறுமையால் வாடும் முஸ்லிம்கள் மீது கற்பழிப்பு, கொலை, தீ வைத்தல், இருப்பிடங்களை நாசப்படுத்தியமை என குற்றச் செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. காமவெறி கொண்ட காடையர்களாலும் இராணுவத்தாலும் பெண்கள் அடுத்தடுத்து கற்பழிக்கப்பட்டுள்ளனர். தமதுகாமப் பசியை தீர்த்துகொண்ட பின் இந்தப் பெண்களின் இரண்டு மூன்று வயது குழந்தைகளோடு சேர்த்து கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. முஸ்லிம்கள் கொத்துகொத்தாக் கொல்லப்படுவது அங்கு வழமையான ஒன்றாகிவிட்டது. இராணுவம் ஹெலிகொப்டர்களைப் பாவித்து தப்பிச் செல்லும் ரோஹிங்யாமுஸ்லிம்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவருகின்றது. இவை அனைத்துமே தக்க ஆவணங்களோடு பதிவாகியுள்ளன.

சமாதானத்துக்கான நோபல் பரிசுபெற்ற மியன்மாரின் ஆட்சியாள ஆங் சூங் சூகி ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடூரத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இன்னமும் காணப்படுகின்றது.

ஆங் சாங் சூகி தலைமையில் இந்த அநியாயத்துக்கு முடிவுகட்டப்படும் என்று முழு உலகமும் எதிர்ப்பார்த்தது. ஆனால் அது நடக்கவில்லை. ஒருகாலத்தில் மியன்மார் முஸ்லிம்கள் சகல உரிமைகளும் கொண்ட சமபிரஜைகளாகவே காணப்பட்டனர். பேரினவாத இராணுவம் தான் அவர்களின் உரிமைகளை உடைத்தெறிந்தது. டைம் சஞ்சிகையால் பௌத்த பயங்கரவாதத்தின் முகம் என வர்ணிக்கப்பட்ட விராத்துதேரரின் கொடுமைகளுக்கு அவர்கள் ஆளாக மியன்மார் இராணுவம் தான் வழிவகுத்தது.

மியன்மாரில் முஸ்லிம்களை இன ரீதியாக அழித்து ஒழிப்பதுதான் அவர்களின் இறுதி இலக்கு. இதை பங்களாதேஷின் தென் பகுதியில் உள்ள ஐ.நா அகதிகள் முகவராண்மையின் பிரதானியே குறிப்பிட்டுள்ளார். இந்த வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட பின் சூகி அந்தப் பகுதிக்கு விஜயம் செய்யக் கூட இல்லை. அவர் தனது கையாளாகாத நிலையையே வெளிப்படுத்தி உள்ளார். அது மட்டும் அன்றி சூகி இந்தக் கொலைகாரர்களுக்கும் காமுகர்களுக்கும் ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இந்தப் பிரதேசத்தில் இடம்பெறும் வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக அவர்கள் போராடுவதாக சூகி புதிய அறிவிப்பை விடுத்துள்ளார். மனித உரிமை மீறப்படாத ஒருநாடு இருந்தால் அதை எனக்கு காட்டமுடியுமா என்ற கேள்வியையும் சூகிமுன்வைத்துள்ளார். இதன் மூலம் மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான மனிதஉரிமை மீறல்களை அவர் நியாயப்படுத்தி உள்ளார்.

ஆங் சாங் சூகி தனது மனசாட்சியை திறந்து மியன்மார் மக்களோடு நேரடியாகப் பேசவேண்டும் என ஐ.நா செயலாளரின் விஷேட ஆலோசகர் விஜய் நம்பியார் கேட்டுள்ளார். மியன்மாரில் உள்ள எல்லா சமூகத்தவர்களும் இந்த வன்முறைகளை வன்மையாகக் கண்டிக்க வேண்டும. குற்றப் பின்னணி கொண்ட ஒரு சிறிய குழு ஒரு பிராந்தியம் முழுவதும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது என்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சூகி தலைமையிலான அரசு இந்த விடயங்களை கண்டும் காணாமல் இருப்பதாக ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர்செயிட் றாத் அல் ஹ{ஸேன் தெரிவித்துள்ளார். குறிப்பிட்டபிராந்தியத்தில் நீண்டகாலஅடிப்படையில் மோசமானவிளைவுகளை இது ஏற்படுத்தும் என்றும் அவர்எச்சரித்துள்ளார்.

ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதானகொலைகள் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகள் பற்றிதினசரிதனதுஅலுவலகத்துக்குமுறைப்பாடுகள் வந்தவண்ணம் உள்ளதாகவும் மனிதஉரிமைஆணையாளர்தெரிவித்துள்ளார். இங்குஎதுவுமேநடக்கவில்லைஎன்றுமியன்மார்அதிகாரிகள் கூறுவதுஉண்மையாயின் அவர்கள் ஏன் எமதுஅதிகாரிகள் அங்குவிஜயம் செய்யஅனுமதிவழங்கமறுக்கின்றார்கள்? என்றும் அவர்கேள்விஎழுப்பியுள்ளார். எமக்குஅனுமதிஅளிக்கதொடர்ந்தும் மறுப்பதால் அங்குஏதோமோசமானசம்பவங்கள் இடம்பெறுவதாகவேநாம் கருதவேண்டியுள்ளதுஎன்பதேஅவரின் கருத்தாகும்.

ரோஹிங்யாக்களுக்குஎதிராக இழைக்கப்படும் குற்றங்கள் மனிதகுலத்துக்குஎதிரானகுற்றங்கள். 2012இல் இந்த இன வன்முறைகள் தொடங்கப்பட்டதுமுதல் 120000 த்துக்கும் அதிகமானரோஹிங்யாமக்கள் தங்களதுவசிப்பிடங்களில் இருந்துவிரட்டப்பட்டுள்ளனர். அவர்கள் எந்தவிதமானவசதிகளும் அற்றமுகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்என்று ஐ.நா மனிதஉரிமைஆணையாளர்தகவல்களைவெளியிட்டுள்ளார்.

மியன்மார் முஸ்லிம்கள் ஒருகாலத்தில் வசதியாகவாழ்ந்தனர். அவர்களில் பலர்செல்வாக்குமிக்கவர்களாகவும் காணப்பட்டனர். அவர்களுக்குதொழில்,வர்த்தகம்,பாரியதொழிற்சாலைகள் எனபலசெல்வங்கள் இருந்தன. எல்லைக் கட்டுப்பாடுகள் அற்றஅன்றையகாலபர்மா முஸ்லிம்கள் மிகச் சிறந்தவெளித் தொடர்புகளையும் கொண்டிருந்தனர்.

பலபர்மா முஸ்லிம்கள் ஆடம்பரபங்களாக்களில் வாழ்ந்தனர். ஆனால் அவற்றில் இருந்துவெளியேறஒருசிலமணிநேரம் காலக்கெடுவழங்கப்பட்டநிலையில் அவர்கள் தாங்கள் வாழ்ந்தவீடுகளில் இருந்துதிடீர்எனவெளியேற்றப்பட்டனர். இவ்வாறுவெளியேற்றப்பட்டபலர் இன்னும் நடுவீதிகளில் தான் உள்ளனர். ஒருகாலத்தில் ஏனைய முஸ்லிம் நாடுகளில் வாழும் முஸ்லிம்களைப் போலவேசெல்வத்தோடுவாழ்ந்தவர்கள் தான் பர்மா முஸ்லிம்கள். இன்றுஅவர்களின் நிலைமிகவும் கவலைக்கிடமாகஉள்ளது.

1962ல் பர்மாவில் ஒரு இராணுவசதிப் புரட்சி இடம்பெற்றது. அந்தபுரட்சியோடு இரவோடு இரவாகபர்மா முஸ்லிம்களின் நிலைமைதலைகீழாகமாறிப் போனது. அன்றுமுதல் மோசமடையத் தொடங்கியஅவர்களின் நிலைதான் இன்று இந்தளவுமோசமானகட்;டத்தைஅடைந்துள்ளது. முஸ்லிம்களுக்குஎதிரானபொதுவானபோக்குடையபக்கச்சார்பானசிலஊடகங்கள் கூட இன்றுஉலகில் மிகவும் அடக்குமுறைக்குஆளானஒருசமூகம் எனஅவர்களைக் குறிப்பிடும் அளவுக்குநிலைமைமோசமடைந்துள்ளது.

பர்மாவில் உள்ள முஸ்லிம்கள் என்னசெய்தார்கள்? அல்லதுஎன்னசெய்யத் தவறினார்கள்? 1962ல் ஏன் அவர்களின் தலையெழுத்து இரவோடு இரவாகமாறியது. தேசங்களின் தலைவிதிகளைமாற்றுபவன் இறைவன் ஒருவனே. அடக்குமுறையாளர்களும் அவனதுசேனையின் ஒருபகுதியே. இந்தஅடக்குமுறையாளர்கள் தான் சமூகங்களின் தலையெழுத்தைமாற்றிஅமைக்கின்றனர். எனவே இந்ததலையெழுத்துமாறஉண்மையானகாரணம் இறைவனே. தமதுநிலைமைகளில் மாற்றம் காணவேண்டுமானால் மியன்மார் முஸ்லிம்களும் ஏனைய நாடுகளின் முஸ்லிம்களும் செய்யவேண்டியதுஎன்ன? இந்தக் கேள்விகளுக்கானபதில் இவ்வாறுதரப்பட்டுள்ளது.

ஹஸ்ரத் நத்விஅவர்கள்ஏற்கனவேபர்மாமக்களுக்குவிடுத்தஎச்சரிக்கையில் இறைவனுக்குபொறுத்தமானசரியானவாழ்க்கையை இந்தநாட்டில் நீங்கள் வாழாவிட்டால் இந்தநாட்டில் நீங்கள் வாழவேமுடியாதஒருகாலம் வரும் என்றுகுறிப்பிட்டுள்ளார்.அவர்அந்தஎச்சரிக்கையில் தொடர்ந்துகுறிப்பிட்டுள்ளதாவது:

தார்மீகஒழுக்கங்களுடன் கூடியவாழ்ககைமுறையைநீங்கள் வாழமுயற்சிக்காவிட்டால் உங்கள் வர்த்தகம் மற்றும் தொழில்துறைஎன்பனகூட ஆபத்தைஎதிர்நோக்கும். எந்தஒருநாடாயினும் சரி முஸ்லிம்கள் பாதுகாப்பாகவாழவேண்டுமானால் அவர்கள் இறைவனுக்குபொறுத்தமானஒழுக்கநெறிகள் மிக்கவாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்கவேண்டும். அவர்கள் தாம் பின்பற்றும் அந்தவாழ்க்கைமுறையைமற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கவேண்டும். அப்போதுஎல்லாம் வல்ல இறைவன் இந்தசமூகத்தின் பாதுகாப்பைதானேபொறுப்பேற்றுக் கொள்வான்.

மார்க்கத்தைப் பற்றியபுரிந்துணர்வை இறைவன் உங்களுக்குவழங்கி இருந்தால் அந்தவாழ்க்கைமுறையைநீங்கள் பின்பற்றவேண்டும். இல்லையேல் வாழ்வதே கஷ்டமாகிவிடும்.எனது இந்தஉரைஉங்கள் நினைவுகளில் இருக்குமா இருக்காதாஎன்பதுஎனக்குதெரியாது. ஆனால் இன்று இங்குள்ளவர்களில் யாராவதுஆபத்துஎற்படும் காலத்தில் உயிருடன் இருந்தால் இந்தஉரைஉங்கள் நினைவுக்குவரும். நான் எதிர்காலத்தைஅறிவிப்புச் செய்பவன் அல்ல. பத்துஆண்டுகளுக்குப் பின் என்னநடக்கும் என்பதுஎனக்குத் தெரியாது.ஆனால் கருமேகம் சூழ்ந்துகாற்றும் வீசும் போதுமழை வரப் போகின்றதுஎன்பதைகணிப்பது கஷ்டமானவிடயம் அல்ல. அவ்வாறுமழைபெய்யும் போதுஇந்தக் கணிப்பைக் கூறியவரையாரும் புனிதராகப் பார்ப்பதில்லை. காரணம் அதுஅவர்தெளிவானசான்றுகளின் அடிப்படையில் தனதுஅறிவைகொண்டு கூறியவிடயம்.அந்தஅடிப்படையில் தான் நானும் கூறுகின்றேன்இ கஷ்டமானஒருகாலத்துக்குநிங்கள் முகம் கொடக்கவேண்டியிருக்கும். இறைவன் பெயரால் நிங்கள் உங்கள் உலகவிடயங்களுக்குமுக்கியத்துவம் அளிக்கவேண்டாம் எனகேட்டக் கொள்கிறேன். இறைவனின் பக்கம் கவனத்தைதிருப்புங்கள். இறைசிந்தனையின் அடிப்படையில் இறைதத்துவத்தின் அடிப்படையில் வாழப் பழகிக் கொள்ளுங்கள் என்று ஹஸ்ரத் நத்விஅன்றேஎச்சரிக்கைவிடுத்துள்ளார்.

ஆனால்பர்மா முஸ்லிம்கள் இந்தப் போதனைகளுக்குசெவிசாய்க்கவில்லை. இன்றுவரை இந்தப் போதனையில் பொதிந்துள்ளஉண்மையின் பக்கம் அவர்கள் தம் கவனத்தைசெலுத்தவில்லை.அவர்கள் அன்றுசெவிசாய்க்கத் தவறியதால் தான் இன்றையநிலைக்குஆளாகியுள்ளனர்.அவர்கள் தொடர்ந்தும் அப்படியே இருந்தால் நிலைமை இதைவிடமோசம் அடையலாம். மியன்மார் முஸ்லிம்களின் இன்றையநிலை இலங்கை முஸ்லிம்களுக்கும் நிச்சயம் ஒருபாடமாகும்.

-லத்தீப் பாரூக்