மஸ்ஜிதுன் நபவி தாக்குதல் சூத்திரதாரி சுட்டுக் கொலை (video)

கடந்த வருடம் ஜுலை மாதம் மதீனா, மஸ்ஜிதுன் நபவியைக் குறிவைத்து தாக்குதலைத் திட்டமிட்டிருந்த தீவிரவாதிகளுள் ஒருவரை சுட்டுக்கொன்றுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது சவுதி அரசு.

சனிக்கிழமை அதிகாலையில் இடம்பெற்ற தேடல் நடவடிக்கையின் போது தலைநகர் ரியாதில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் சவுதி பொலிஸ் அதிகாரியின் துணிச்சலான நடவடிக்கையால் யஸ்லம் அல் ஸயாரி என அறியப்பட்ட குறித்த நபரும் அவரது சகா ஒருவரும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலுக்கும் ஐ.எஸ் அமைப்பினர் உரிமை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தீவிரவாதிகளை எதிர்கொள்ளும் போதான காணொளி: