பொதுப் பிரச்சினைகளில் மு.கா இணையாமலிருப்பது ஏன்: ஹிஸ்புல்லா கேள்வி

வடபுல மக்களின் காணிப் பிரச்சினைகள் போன்ற பொதுப் பிரச்சினைகளில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றிணையும் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரம் இணைந்து கொள்ள மறுப்பதேன் என கேள்வியெழுப்பியுள்ளார் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா.

வில்பத்து பிரச்சினை தொடர்பில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து குரல் எழுப்பியுள்ள போதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இவ்விடயத்தில் ஒத்துழையாமல் இருப்பது தொடர்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், முஸ்லிம் காங்கிரசின் இணைவு அவசியமானது எனவும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-Mafaz