அளுத்கம வன்முறைக்கு கோத்தாவே காரணம்: ராஜித (video)

அளுத்கம வன்முறைக்கு கோத்தபாயவே காரணம் என தெரிவித்துள்ளார் ராஜித சேனாரத்ன.

வன்முறையாளர்களுக்கு முழுப் பாதுகாப்பை வழங்கியது கோத்தபாயவே எனவும் மேலும் தெரிவித்துள்ள அவர்,குறித்த வன்முறைக்குத் தூண்டுதலாக அமைந்த ஞானசாரவின் கூட்டத்திற்கு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் அநுர சேனாநாயக்க ஊடாக பாதுகாப்பை வழங்கி அக்கூட்டத்தைத் தவிர்க்கத் தவறியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மஹிந்த அரசில் கோத்தபாயவே அனைத்தையும் கட்டுப்படுத்தியதாகவும் அவரே குறித்த வன்முறைக்கான அனுமதியை வழங்கியதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.