எத்தனை ‘ஜமாத்’ இருந்தும் இவர்கள் திருந்தவில்லை!

நம் சமூகத்தில் இன்றைய நாளின் தலையாய பிரச்சினை ஜமாத் பிரிவினையிலருந்து ஆரம்பிக்குது… மார்க்கத்தைப் பின்பற்றுகிற வழிமுறையில ஆளாளுக்கு.. விதம் விதமான தப்சீர் வச்சு நான் தான் சரினு சண்டை பிடிச்சுக்கிட்டு … விஜேதாச ராஜபக்ச நாடாளுமன்றத்துல போய் இவைங்க உள்ளாள அடிச்சுக்கிட்டு ஆளைக் கொல்லுறாங்கனு சொல்லற அளவுக்குப் போச்சு…

அப்டி இப்டி கூட்டிக் கழிச்சுப் பார்த்தா.. மினிமம்… நாலைஞ்சு ஜமாத்தாவது இருக்கு… ஆனா அத்தனை இருந்தும் இன்னைக்கு அங்கும்புறை வரைக்கும் துப்பாக்கியை தூக்கிட்டு போய் மனித வேட்டை ஆடி.. பக்கத்து ஊர்ல சிங்கள மக்கள் பிடிச்சு கொடுக்கிற வரைக்கும் போன இவங்க திருந்தலையேனு சிந்திக்கிறப்ப… கவலையாத்தான் இருக்கு..

அது அவனோட பிழை…. னு சொல்லி தப்பிக்கலாம்.. அவன் கேட்டதை வச்சு நல்லதைக் கடைப்பிடிக்க அவனுக்கு தெரியலனா அவன் அப்டித்தான் இருப்பான்னும் விளக்கம் சொல்லாம்.. ஒரு வேளை அவனுக்கும் புரியுறமாதிரி நல்லத சொல்லிக் கொடுக்கேலாம இருந்திருக்கோமோனு யோசிச்சா… ம்.. சில நியாயங்கள் புரியலாம்.

காலையில ஒருத்தர் வட்ஸ்அப்ல ஒரு போட்டோவ போட்டுட்டு… நான் பார்த்திருப்பனோ இல்லையோனு போன் பண்ணி வேற பாருங்கன்னாரு… போட்டோவ பார்த்தா… இன்னைக்கு கல்ஹின்னைல நடந்த சம்பவத்துக்கும் ஐசிசுக்கும்.. ஸ்ரீலங்கால முஸ்லிம் தீவிரவாதம்னும் முடிச்சுப் போட்டு எழுத்துக்கள்.. விஜேதாச இப்போதான் சொல்லி முடிச்சாரு.. நம்ம பசங்க அது பத்தலனு … ஹெவியா T56 வேற கொண்டு போயிருக்காங்க..

எல்லா விசயங்களையும் பண்ணறதுல ஒரு படி மேலதான் நம்ம சமூகம் இருக்கு…. அப்படியிருக்க ஊருப்பட்ட ஜமாத்துகளும் .. நலன்புரி அமைப்புகளும் சேர்ந்து சமூகத்துல மேலோட்டமா எதையாச்சும் பண்ணிக்கிட்டிருக்கோம்.. அடியில இருக்கிற ஓட்டைய பூசி மெழுகிகிட்டு…

இப்போ பேஸ்புக் யுகம்… அதுல ஒரு அக்கவுன்ட்ட வச்சி ஒரு நாளைக்கு ஒரு ஸ்டேட்டஸ் போடறதுக்கு கூட நேரமில்லாத வாழ்க்கை… ஆனா நம்ம பசங்க பல ‘fake’ அக்கவுன்டுகள வச்சு .. அதுக்கு ‘மையவாடி’ பேரெல்லாம் வச்சிக்குட்டு உலாவுறாங்க… வந்த புதுசுல பேஸ்புக் இல்லை.. ‘பித்னா புக்’னு பத்வா கொடுத்தவங்கள்லாம் இப்போ பேஸ்புக்ல இருக்கிறதுனால இதுகள கண்டுக்கறதில்லை.. காலம் அப்டியாச்சு..

ஆனா நாம பள்ளி கட்டுறதுலயும்.. எந்தப் பள்ளியில எப்படி தொழுறதுங்கறதுலயும் .. அடாத்தா வாக்குவாதம் பண்ணி … லைவ் விவாதம் .. அதுக்கு அழைப்பு .. மறுப்பு.. குரோதம்.. விளக்கம்னு மார்க்க முரண்பாடுகளை வளர்த்துக்கிட்டிருக்கம்…

அமைதியை போதிக்கற மார்க்கத்துல .. குணசீலர்களை உருவாக்க வேண்டிய தேவை நிறைந்த உலகத்துல.. சமூக அலட்சியம் தான் பெருகிப் போச்சு…

ஜனாதிபதி தேர்தல் நேரத்துலயும் பதுளையில நடு ரோட்ல ஒருத்தரை வெட்டிப் போட்டாங்களே… அது கூட நம்மாளுங்களோட குடும்ப சண்டைதான்…. ம்…

வேதனையுடன்…

-Irfan Iqbal