அமெரிக்க சட்டசபையில் ஹிஜாபுடன் முஸ்லிம் பெண்!

முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப் போவதாகத் தெரிவித்து ஜனாதிபதியாகத் தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழான அமெரிக்க சட்ட சபைக்கு ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண் ஒருவர் தெரிவாகியுள்ளர்.

மினசோட்டா 60B மாவட்டத்தின் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பேற்றே இல்ஹான் ஒமர் (34) எனும் சோமாலியாவைப் பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம் பெண் அமெரிக்க வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.

முஸ்லிம்கள் செறிந்து வாழும் குறித்த மாவட்டத்தில் போட்டியிட்ட ஏனைய வேட்பாளர்களும் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்க அதேவேளை பெருவாரி வாக்குகளைப் பெற்று இல்ஹான் ஒமர் வெற்றி பெற்றுள்ளமையும் அவரும் டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

அமெரிக்காவுக்கு அகதியாகவே வந்திருந்த இல்ஹான், நீண்டகாலமாக பெண்கள் உரிமைகள் தொடர்பான சமூக சேவை மற்றும் அரசியலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.