இனி வருபவர்களுக்கு பதவி இல்லை; மஹிந்தவுக்கு அழுத்தம்!

2015 ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் பாரிய பின்னடைவை சந்தித்திருந்த மஹிந்த ராஜபக்சவின் கை உள்ளூராட்சித் தேர்தலுடன் ஓங்கியுள்ள நிலையில் புதிதாக கட்சி தாவி இணைந்து கொள்பவர்களுக்கு பதவிகளைத் தரக்கூடாது என கூட்டு எதிர்க்கட்சி பிரமுகர்கள் மஹிந்த ராஜபக்சவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியையும் மஹிந்தவிடம் கொடுத்துவிட வேண்டும் என மைத்ரிக்கு ஆலாசேனை வழங்கப்பட்டுள்ள நிலையில் மைத்ரி அணியில் உள்ளவர்கள் மஹிந்தவுடன் இணைந்து கொள்ளக்கூடும் என்பதால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவிகளற்ற நிலையில் மூன்று வருடங்கள் போராடியவர்களே அமைப்பாளர் பதவிகளுக்கும் நியமிக்கப்பட வேண்டும் என கட்சி உறுப்பினர்கள் மஹிந்தவுக்கு அழுத்தம் விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.