UNPயை தமிழ் மக்கள் புறக்கணித்ததேன்: சிவாஜிலிங்க விளக்கம்!

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்க வட-கிழக்கில் தமிழ் மக்கள் போதிய அளவு ஆதரவை வழங்காது புறக்கணித்துள்ள நிலையில் அதற்கான காரணம் அரசின் பௌத்தமயமாக்கல் செயற்திட்டம் என விளக்கமளித்துள்ளார் சிவாஜிலிங்கம்.

வட-கிழக்கில் 1000 விகாரைகளை அமைக்கப் போவதாக அறிவித்திருந்தமை தமிழ் மக்களுக்கு மிகுந்த அதிருப்தியை உருவாக்கியிருந்ததாகவும் பலவந்தமாக இவ்வாறான நிர்மாணங்கள் அவசியமில்லாத நிலையில் நம்பி வாக்களித்த ஐக்கிய தேசியக் கட்சி மக்களை ஏமாற்றி விட்டதாகவும் அதனாலேயே உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் ஐ.தே.கட்சியை புறக்கணித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பௌத்த வாக்காளர்களையும் திருப்திப்படுத்த அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கையாண்டமை எதிர் விளைவுகளை உருவாக்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.