கூட்டு எதிர்க்கட்சியும் ‘ஆட்சியமைக்க’ முயற்சி: வாசு

உள்ளூராட்சி தேர்தலில் அரசாங்கம் படுதோல்வியடைந்துள்ள நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என தெரிவித்து வரும் கூட்டு எதிர்க்கட்சி ஆட்சியமைக்கவும் முயற்சிப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார் வாசுதேவ நானாயக்கார.

ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ள நிலையில் நாடாளுமன்றப் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு கூட்டு எதிர்க்கட்சியும் முயல்வதாக வாசு தெரிவித்துள்ள அதேவேளை ரணிலுக்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளதன் பின்னணியில் அதற்கான பணிகளும் இடம்பெற்று வருகின்றது.

நீண்ட காலம் இழுபறிக்குப் பின் இடம்பெற்ற தேர்தலில் மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.