நான் அமெரிக்கன்; பிரதமராக முடியாது: கோத்தா

தான் ஒரு அமெரிக்க பிரஜையென்பதால் பிரதமராக முடியாது என தெரிவித்துள்ளார் கோத்தபாய ராஜபக்ச.

அமெரிக்காவிலிருந்து திரும்பியுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை வழங்கினால் ஏற்றுக்கொள்வாரா என கேட்கப்பட்டதற்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இதேவேளை, 19ம் திருத்தச் சட்டத்துக்கமைய மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக முடியாத நிலையில் கோத்தபாயவையே ஜனாதிபதி வேட்பாளராக்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.