மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும்: சுப்பிரமணிய சுவாமி

மஹிந்த ராஜபக்ச மீண்டும் இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் இந்தியாவின் சர்ச்சைப் பேர்வழி சுப்பிரமணிய சுவாமி.

உள்ளூராட்சித் தேர்தலில் மஹிந்த அணி பெற்றிருக்கும் வெற்றியை மெச்சியுள்ள சுபபிரமணிய சுவாமி, இலங்கையை நிலைப்படுத்த மஹிந்தவின் தலையீடு மீண்டும் தேவைப்படுவதாகவும் அவரே மீண்டும் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஏலவே இரு தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ச, வாழ்நாள் ஜனாதிபதியாகும் கனவில் முன் கூட்டியே தேர்தலை நடாத்தியே தோல்வி கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.