இனி ஜெருசலத்தைப் பற்றிப் பேச்சில்லை: ட்ரம்ப்!

ஜெருசலமே இஸ்ரேலின் தலை நகர் எனும் தமது அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லையெனவும் எந்தவொரு சமாதான பேச்சுவார்த்தையிலும் இது பற்றி எந்தப் பேச்சிலும் அமெரிக்கா ஈடுபடாது எனவும் தெரிவிக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்.

இந்நிலையில், இரு தரப்பும் உடன்படக் கூடிய எல்லைப் பிரிப்புக்குத் தமது தரப்பு ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லையெனவம் தெரிவித்துள்ள ட்ரம்ப், ஜெரூசலம் முடிந்து போன கதையென தெரிவிக்கிறார்.

கிழக்கு ஜெருசலத்தைத் தலைநகராகக் கொண்ட பலஸ்தீன தேசத்தை சர்வதேச நாடுகள் அங்கீகரித்துள்ள போதிலும் அமெரிக்கா ஒரு தலைப்பட்சமாக ஜெரூசலத்தை இஸ்ரேலுக்கு தாரைவார்த்துக் கொடுக்க முயல்கின்றமை குறிப்பிடத்தக்கது.