வைத்தியசாலையில் அனுமதி கோரும் அர்ஜுன் அலோசியஸ்!

கூட்டாட்சி அரசில் கைது செய்யப்பட்ட பெரும்பாலான முக்கியஸ்தர்கள் கைதானதும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி பெறும் தொடர்ச்சியில் பர்பசுவல் டிரசரிஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியசும் தாம் சுகயீனமுற்றிருப்பதாகவும் தன்னை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் எனவும் முன் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஏலசே முக்கிய பிரமுகர்களின் சிறைச்சாலைப் பகுதியிலேயே அலோசியஸ் மற்றும் பாலிசேனவுக்கு இடமும் வசதியும் வழங்கப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையிலேயே அலோசியசின் வைத்தியசாலை அனுமதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.