மிஹின் லங்கா: இரு வாரங்களில் விசாரணை குழு!

மத்திய வங்கி பிணை முறி மோசடி விசாரணையை ஜனாதிபதி ஆணைக்குழு நிறைவு செய்துள்ள நிலையில் மிஹின் லங்கா மற்றும் ஸ்ரீலங்கன் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இரு வாரங்களுக்குள் இதற்கான விசாரணைக்குழுக்கள் நியமிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திஸ்ஸமகராமயில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்தே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.