குடும்பத்துக்குள் சதியா? விசாரணை கோரும் நாமல்!

கோத்தபாய ராஜபக்சவை சிறைப்படுத்த ராஜபக்ச குடும்பத்துக்குள்ளேய சதி நடப்பதாக இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளமை தொடர்பில் விசாரணை கோருகிறார் நாமல் ராஜபக்ச.

கோத்தபாயவின் அரசியல் வரவை மஹிந்த ராஜபக்ச விரும்பவில்லையென நீண்டகாலமாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை மீண்டம் பசில் முன்னெடுத்துச் செல்வதால் பல்வேறு குடும்ப சர்ச்சைகள் தொடர்பில் அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றது.

இந்நிலையிலேயே இசுரு இவ்வாறு தெரிவித்துள்ளமையும் நாமல் அது தொடர்பில் விசாரணை கோருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.