வெலிகடை படு கொலைகள்: விரைவில் இரு முக்கிய நபர்கள் கைது?

2012ம் ஆண்டு மஹிந்த நிர்வாகத்தின் கீழ் வெலிகடை சிறைச்சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 27 கைதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் இரு முக்கிய புள்ளிகள் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறைச்சாலை நிர்வாகத்தின் முக்கிய புள்ளிகள் இருவரே இவ்வாறு கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து இரு வேறு விசாணைக்குழுக்கள் விசாரணை நடாத்தியுள்ள நிலையில் கொலை செய்யப்பட்ட கைதிகளின் அருகில் வேண்டுமென்றே ஆயுதங்கள் வைக்கப்பட்டமை தொடர்பில் சாட்சியங்கள் பதிவாகியுள்ளது.

கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரிலேயே இக்கொலை வெறியாட்டம் நடாத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.