ஜனாதிபதிக்கு இன்னும் 695 நாட்களே பதவிக்காலம்: CaFFE

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு இன்னும் 695 நாட்களே பதவியில் இருக்க முடியும் என நேற்றைய தினம் நீதிமன்றில் தமது தரப்பின் சார்பில் விளக்கமளித்துள்ளது கபே அமைப்பு.

1099 நாட்கள் ஏலவே நிறைவு செய்துள்ள நிலையில் 2019 டிசம்பர் 31ம் திகதியுடன் அவரது பதவிக் காலம் முடிவடைகிறது எனவும் அதிலிருந்து 30 நாட்களுக்குள் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும் எனவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும் சட்டமா அதிபர், ஜனாதிபதி ஆறு வருடங்களுக்கு பதவியில் தொடரலாம் என தெரிவித்திருந்த அதேவேளை நீதிபதிகள் குழுவும் ஆறு வருடங்களுக்கு மைத்ரி பதவியில் தொடரலாம் என அபிப்பிராயம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் 19ம் திருத்தச் சட்டத்தினடிப்படையிலான பதவிக் காலக் குறைப்பு செல்லுபடியாகாது என்றால் தான் மீண்டும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவதற்கும் தடையில்லையென மஹிந்த ராஜபக்ச தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.