ரூ. 60 லட்சம் போதைப் பொருளுடன் இந்திய பிரஜை கைது!

60 லட்ச ரூபா பெறுமதியான போதைப் பொருளை நாட்டுக்குள் கடத்தி வர முயன்ற இந்திய பிரஜையொருவர் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பயணப் பொதியில் மறைத்து வைத்து குறித்த நபர் போதைப் பொருளைக் கடத்த முயன்றதாகவும் இரவு 9.45 அளவில் இக்கைது இடம்பெற்றதாகவும் சுங்கத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மினுவங்கொட நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.