ஈரான்: அரசுக்கு ஆதரவாக ‘போட்டி’ ஆர்ப்பாட்டம்!

ஈரானிய அரசு, சமய ஆட்சிக்கு எதிராக ஆங்காங்கு மக்கள் போராட்டம் வெடித்திருந்த நிலையில் அரசுக்கு ஆதரவாக பாரிய போட்டி ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றுள்ளது.

பொருளாதார, வாழ்க்கைச் செலவுகளை முன் வைத்து ஆரம்பமான போராட்டம் அரசியலாக மாற்றப்பட்டிருந்த நிலையில் ஆர்ப்பாட்டக் காரர்களை கைது செய்யக் கூடாது என அமெரிக்காவும் குரல் கொடுத்திருந்தது.

இந்நிலையில், அரச ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டு ஆர்ப்பாட்டங்களை நடாத்தியுள்ளதோடு சில இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கியிலும் வெளிநாட்டு ஆதரவு இராணுவ சதிப் புரட்சி தோல்வி கண்டதோடு மக்கள் அரசுக்கு ஆதரவாக அணி திரண்டிருந்தமை நினைவூட்டத்தக்கது. ஐ.எஸ். திட்டம் தோல்வியடைந்துள்ள நிலையில் மத்திய கிழக்கில் புதிய குழப்பங்களை உருவாக்க அமெரிக்க – இஸ்ரேல் கூட்டணி முயன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.