அமெரிக்காவின் முடிவுக்கு சவுதி கண்டனம்!

ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்துள்ள அமெரிக்காவின் முடிவுக்கு சவுதி அரேபியா உத்தியோகபூர்வ கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

முன்னராக ட்ரம்புடன் தொலைபேசியில் உரையாடிய மன்னர் சல்மான் இவ்வாறான ஒரு முடிவை பல முறை மீள் பரிசீலனைக்குட்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், அமெரிக்காவின் திட்டப்படி அதற்கான அறிவிப்பு நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை நேரடியாக வரவேற்காது விடினும் தமது அடையாளம் உலக அரங்கில் நிரூபிக்கப்பட்டு வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெருமிதமடைந்துள்ளார். இதேவேளை பலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.