தனித்தே ‘போட்டி’ மஹிந்த அணி முடிவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு முழு அளவில் முயற்சி செய்து கை கூடாது போயுள்ள நிலையில் தாம் தனித்தே போட்டியிடப் போவதாக மஹிந்த அணி முடிவு செய்துள்ளது.

இது தொடர்பில் நேற்றிரவு மஹிந்தவின் வீட்டில் கூடி ஆராய்ந்திருந்த அதேவேளை கூ.எ முக்கியஸ்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

சு.க வாக்கு வங்கி இரண்டாகப் பிளவுறுவது ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என கூட்டு எதிர்க் கட்சியினர் கணிப்பிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.