தூர இடங்களுக்கான ரயில் சேவை ஸ்தம்பிதம்!

ரயில்வே சாரதிகளின் 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தினால் கொழும்பிலிருந்து தூர இடங்களுக்கான ரயில் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

அலுவலக நேரத்திலான சேவைகள் மாத்திரமே இயங்குகின்ற நிலையில் புதியவர்களை பணியிலமர்த்தும் முறைமை தொடர்பிலான முரண்பாட்டின் அடிப்படையில் இந்த வேலை நிறுத்தம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.