ஜெருசலமே இஸ்ரேலின் தலைநகர்; ட்ரம்ப் அறிவிப்பு!

ஜெருசலமே இஸ்ரேலின் தலை நகர் என அறிவித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

அமெரிக்கா இதனை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள அவர், இதன் அடிப்படையில் இரு தரப்பினரும் உடன்பட்டால் இரு தேச அடிப்படையிலான சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்கா உதவும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை டெல் அவிவிலிருந்து அமெரிக்காவின் தூதரகமும் ஜெரூசலத்துக்கு மாற்றப்படுவதோடு ஏனைய நாடுகளையும் அமெரிக்கா ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பலஸ்தீனர்கள் போராட்டத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.