ஓ’மாவடி: பதுரியா நகர் அல் மினா வித்தியாலயத்துக்கு புதிய கட்டிடம்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி – மீராவோடை பதுரியா நகர் அல் மினா வித்தியாலயத்தில் 7வது பரிசளிப்பு விழாவும்புதிய மாடிக் கட்டட திறப்பு நிகழ்வும் (4)ம் திகதி பாடசாலையின் அதிபர் எல்.ரீ.எம். சாதிக்கீன் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளோடு இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டதோடு ஏனைய அதிதிகளாக கல்வி அதிகாரிகள்பள்ளிவாயல் தலைவர்கள்ஊர்ப் பிரமுகர்கள்பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.  இந்நிகழ்வில் இப் பாடசாலையில் கல்விகற்று பல்கழைக்கலத்துக்கு தெரிவு செய்யப்பட்டு தற்போது ஆசிரியர் சேவையில் பணியாற்றுபவர்களையும் பாராட்டி பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.