ட்ரம்பின் சூழ்ச்சி; மூன்று நாள் தொடர் போராட்டத்தில் பலஸ்தீனம்!

ஜெருசலத்தை இஸ்ரேலுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நடவடிக்கையை எதிர்த்து பலஸ்தீனத்தில் மூன்று நாள் தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதரகத்தை ஜெரூசலத்துக்கு மாற்றுவதன் மூலம் அங்கு பாதுகாப்பு கெடுபிடிகளை அதிகரித்து பலஸ்தீனர்களை முழுமையாக வெளியேற்றும் பின்னணியுடன் இஸ்ரேலின் தலை நகராக ஜெரூசலத்தை அங்கீகரிக்கவுள்ளார் ட்ரம்ப்.

அரபு நாடுகள் இது குறித்து ‘கண்டனம்’ வெளியிடுவதுடன் நிறுத்திக் கொண்டுள்ள நிலையில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.