ஊழலை ஒழிக்க அமெரிக்காவிடமிருந்து ‘உதவி’!

இலங்கையில் ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவவுள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த வருடம் முதல் இலங்கையில் நல்லாட்சியை உருவாக்குவதற்கான அடிப்படையில் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு உதவி வருவதாகவும் அவ்வுதவிகள் தொடரவுள்ளதாகவும் அமெரிக்கா ராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊழல் அதிகாரிகளால் வருடாந்தம் 20 பில்லியன் அமெரிக்க டொலர் திருடப்படுவதாக (சர்வதேச அளவில்) உலக வங்கி சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.