அமெரிக்க தூதரகத்தை ஜெருசலத்திற்கு மாற்றும் ட்ரம்ப்!

ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக்குவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க தூதரகத்தை ஜெருசலத்திற்கு மாற்றுவதற்கான உத்தரவை பிறப்பிக்கவுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை உருவாக்கக் கூடிய இந்நகர்வுக்கு எதிராக பலஸ்தீனர்கள் போராட்டத்தில் இறங்கவுள்ளதாக அறிவித்துள்ள அதேவேளை ட்ரம்பின் அறிவிப்பு திட்டமிட்டபடி வெளியாகும் என அமெரிக்கா தெரிவிக்கிறது. அரபு நாடுகள், பிரான்ஸ் உட்பட சர்வதேச நாடுகள் இந்நகர்வுக்கு கண்டனம் வெளியிட்டுள்ளதுடன் ட்ரம்ப் தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என அரபு லீக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.