உட்கட்சி முறுகல்; விமல் வீரவன்சவுக்கு தொடர் சிக்கல்!

விமல் வீரவன்சவின் தேசிய விடுதலை முன்னணி எனும் கட்சி விரைவில் ஆளில்லாத இடமாக மாறும் என எச்சரித்துள்ளார் அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பியசிறி விஜேநாயக்க.

அண்மையில் நாடாளுமன்றம் மீது குண்டு வீச வேண்டும் என விமல் தெரிவித்திருந்தமை தொடர்பிலும் இவர் தன் அதிருப்தியை வெளியிட்டிருந்ததோடு அது விமலின் கருத்தேயன்றி கட்சியின் நிலைப்பாடில்லையென தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கட்சியின் செயலாளர் இராஜினாமா விவகாரத்தை ஊடகங்கள் ஊடாகவே அறியக் கிடைத்ததாகவும் இவ்வாறு இரகசிய நடவடிக்கைகள் கட்சியை வளர்க்கப் பாடுபட்டவர்களை பாதிப்பதாகவும் ஆதலால் விரைவில் ஆளிள்லா இடமாக இக்கட்சி மாறும் எனவும் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ஆதரவு எனும் அடிப்படையில் தனது கட்சியின் பலத்தை நாடாளுமன்றிலும் அதிகரித்துக் கொண்ட விமல் வீரவன்ச, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமது கட்சி சார்பாக 800 வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளதன் பின்னணியில் பசில் ராஜபக்சவுடன் முரண்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இந்நிலையிலேயே விமல் வீரவன்சவின் கட்சி பலவீனப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.