மஹிந்தவின் சகா ‘கப்டன்’ திசாவின் விளக்கமறியல் நீடிப்பு!

அரச நிலத்தை ஆக்கிரமித்து கல்லுடைக்கும் தொழிற்சாலை நடாத்தி வந்த குற்றச்சாட்டில் கைதான மஹிந்த ராஜபக்சவின் சாரதியும் சகாவுமான கப்டன் திஸாவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கப்டன் திசாவின் குறித்த நடவடிக்கையால் அரசுக்கு 29 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மெகா நெகும திட்டத்தின் கீழ் இந்த துஷ்பிரயோகம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் குறித்த நபரும் முன்னாள் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.