சட்டவிரோத ஆட்கடத்தலுக்கு ‘அதிகாரிகளும்’ உடந்தை: சாகல

வெளிநாடுகளுக்கு போலி ஆவணங்கள் மூலம் ஆட்கடத்தலை மேற்கொள்வதில் ஊழல் அதிகாரிகளுக்கும் பங்கிருப்பதாக தெரிவிக்கிறார் சட்ட ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க.

இலங்கை, இந்தியா மற்றும் பங்களதேஷ் ஆகிய நாடுகளில் இவ்வாறான ஊழல் இடம்பெறுவதாகவும் இலங்கையில் அதனைத் தடுப்பதற்குரிய கடுமையான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் சாகல மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.