கொழும்பு: 2300 குடும்பங்களுக்கு வீட்டுறுதிப் பத்திரம் வழங்கி வைப்பு

கொழும்பில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் காணித்துண்டுகள்இ தொடா்மாடி வீடுகளில் தங்கியிருக்கும் 2300 பேருக்கான வீட்டுறுதிப் பத்திரங்கள் நேற்று பிரதமரினால் வழங்கி வைக்கப்பட்டது.

சஜித் பிரேமதாச அமைச்சின் செமட்ட செவன நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் தயா கமகே, மேல் மாகாண ஆளுனா், பிரதியமைச்சா் இந்திக்க பண்டாரநாயக்க மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அ்திகார சபையின் தலைவா் சாகர பலன்சூரிய மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

-அஷ்ரப் ஏ சமத்