மத்திய கொழும்பில் தமிழ்-சிங்கள மொழி மூல ‘தேசிய பாடசாலை’ : சம்பிக்க

மத்திய கொழும்பில் தமிழ்-சிங்கள மொழி மூலம் கற்பிக்கும் தேசிய பாடசாலையொன்று புதிதாக நிறுவப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் சம்பிக்க ரணவக்க.

2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழும் மத்திய கொழும்பு பகுதியில் தமக்கு அருகில் இருக்கும் பாடசாலைகளில் தம் பிள்ளைகளை சேர்க்க முடியாது பெற்றோர் அவதியுறுவதாகவும் ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் ஒரு தேசிய பாடசாலையை உருவாக்கும் அரசின் திட்டத்திற்கமைய இவ்வாறு இரு மொழிகளிலும் கற்பிக்கும் தேசிய பாடசாலையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.