இஸ்ரேல் ‘இரகசிய’ தொடர்பு; பதவியிழந்தார் ஐ.இராச்சிய MP

இஸ்ரேலுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட சர்ச்சையில் சிக்கிய ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச விவகார அபிவிருத்திக்கான செயலாளர் ப்ரீத்தி பட்டேல் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இஸ்ரேலுக்கு விடுமுறையில் சென்றிருந்த நிலையில் அங்கு நெதன்யாஹு உட்பட முக்கிய பிரமுகர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள ப்ரீத்தி, இது குறித்து அமைச்சரவைக்கோ, அங்குள்ள ஐக்கிய இராச்சிய தூதரகத்துக்கோ தகவல் வழங்காததன் பின்னணியில் இச்சர்ச்சை உருவானது.

எனினும், தனது சந்திப்புகள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சருக்குத் தெரியும் என அவர் தெரிவித்துள்ள போதிலும், குறித்த சந்திப்புகளின் போது உத்தியோகபூர்வ நடைமுறைகளை மீறியதன் பின்னணியில் அவர் இராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.