கட்டாரில் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒற்றுமையுடன் குதூகலம்!

இலங்கைக்கென உத்தியோகபூர் தூதரகம் இயங்கும் கட்டாருக்கு நாட்டிலிருந்து முஸ்லிம் அரசியல்வாதிகள் பட்டாளத்தையும் ஜனாதிபதி அழைத்துச் சென்றுள்ளார்.

இதேவேளை, அரசியல்வாதிகளும் தமக்குத் தேவையானவர்கள், நெருக்காமானவர்களையும் கூடவே அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் அங்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் குழு குதூகலமான நிலையில் தம்மைக் காண்பித்துக் கொள்வதில் கடும் சிரத்தையெடுத்து இயங்கி வருகிறார்கள்.

அரசியல் தேவைக்காக இடம்பெறும் இந்நிகழ்வுகளின் பின்னணியில் கட்டாரிடம் நல்ல பெயர் வாங்குவதோடு தமக்கருகில் அரபு மொழியில் ஜஸாகல்லாஹ் மற்றும் சலாம் சொல்லத் தெரிந்தவர்களை கூட வைத்திருப்பது மைத்ரிபாலவின் சாணக்கிய அரசியல் என அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனினும், நாட்டில் முஸ்லிம்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கும் எந்தவொரு கால கட்டத்திலும் ஒன்றாகக் காணப்படாத முஸ்லிம் அரசியல்வாதிகள் குறிப்பாக எதிரும் புதிருமான கட்சித் தலைவர்களும் உற்சாகத்துடனும் நெருக்கத்துடனும் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

-கட்டாரிலிருந்து ஹசன்