என்ன என்று தெரியாமலே வாக்களித்து விட்டோம்: ஹக்கீம்

மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்து வாக்களித்து சமூக மட்டத்தில் பாரிய விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் தாம் கண்டது ஒன்று வாக்களித்தது வேறொன்றுக்கு என்று தெரிவிக்கிறார் ரவுப் ஹக்கீம்.

தேர்தல்களை பின்போடுவதற்கு ஏதுவாக குறித்த திருத்த சட்ட மூலம் கொண்டுவரப்படுகிறது என மஹிந்த ராஜபக்ச உட்பட கூட்டு எதிர்க்கட்சியின் பிரமுகர்கள் மற்றும் ஊடகங்களும் சுட்டிக்காட்டி வந்தன. இந்நிலையில், அவற்றையெல்லாம் மீறி வாக்களித்த மு.கா தற்போது தாம் வாக்களித்த சட்டமூலத்தின் உள்ளடக்கம் தமக்குத் தெரியாது எனவும் இரண்டாவது வாசிப்பில் ஒரு பிரேரணைக்கும் மூன்றாவது வாசிப்பில் வேறு ஒரு பிரேரணைக்கும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவை வாழ்நாள் ஜனாதிபதியாக மாற்றக்கூடிய 18ம் திருத்தச் சட்டத்தில் வாக்களித்த மு.கா அதன் பின் வந்த தேர்தல் காலத்தில் ‘தவறிழைத்து’ விட்டதாக தெரிவித்திருந்தமையும் இம்முறை மத்தியில் வாக்களித்து விட்டு மாகாணத்தில் தேர்தலை உடனே நடாத்த வேண்டும் என போராடுவதாக தெரிவித்து வரும் நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளமையும் மு.கா வாக்களித்த நிர்ப்பந்தத்தில் தான் தாம் வாக்களித்ததாக இன்னுமொரு முஸ்லிம் கட்சியான அ.இ.ம.கா தலைவர் வாக்களித்த பின் விளக்கமளித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.