இன்னுமொரு யுத்தத்திற்குத் தயாராகும் ஈராக்!

சதாம் ஹுசைனின் வீழ்ச்சியின் பின் தொடர் ஆயுத போராட்டங்களால் சிதைந்து போயுள்ள நிலையில் குர்திஸ்தான் பிராந்தியத்தில் இன்னுமொரு போருக்கு ஈராக் தயாராகி வருகிறது.

தனிநாடு கோரி அண்மையில் அப்பிராந்தியத்தில் நடாத்தப்பட்ட அபிப்பிராய வாக்கெடுப்புக்கு மக்கள் பெரும்பான்மையாக ஆதரவளித்திருந்த நிலையில் இன்று குர்திஷ் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளை ஈராக்கிய இராணுவம் முற்றுகையிட்டுக் கைப்பற்றியுள்ளது.

இவ்விவகாரத்தில் துருக்கி – ஈரான் ஆகிய நாடுகளும் ஆதரவளித்து வருவதோடு குர்திஸ்தான் என ஒரு தனி நாடு உருவாவதை அங்கீகரிக்கப் போவதில்லையென அமெரிக்காவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் துருக்கியில் நீண்டகாலமாக தாக்குதல்களை நடாத்தி வரும் குர்திஷ் போராளிகள் தற்போது புதிய முனையை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளமையும் அனைவரையும் அமைதி காக்கும்படி அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.