ரவி தொடர்பில் தகவல் வெளியிட்டவர் தப்பியோட்டம்!

மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவைத் தொடர்பு படுத்தும் தகவல்களை வெளியிட்டிருந்த அனிகா விஜேசூரிய உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

குறித்த விசாரணையின் போது ரவி கருணாநாயக்க குடியிருந்த வீடு தனது என்பதையும் அதற்கான வாடகை செலுத்தி வந்தவர் அர்ஜுன் அலோசியஸ் என்பதையும் அனிகா பகிரங்கப்படுத்தியிருந்தார். இதன் பின்னணியில் ரவி கருணாநாயக்க விசாரிக்கப்பட்டதோடு பின்னர் அழுத்தம் காரணமாக இராஜினாமா செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது உயிரச்சுறுத்தல் காரணமாக அனிகா நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக ஆணைக்குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.