பொலிசார் மீது பொது மக்கள் அதிருப்தி: பொ.ஆ.குழு

பொதுமக்கள் பொலிஸாருக்கு எதிராக அஞ்சாமல் தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவில்நேரடியாகவோ, மறைமுகமாகவோ முறையிடலாம் என ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணப்பணிப்பாளர் ஏ.ரவீந்திரன் தெரிவித்தார்.

தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவின் பணிகள் மற்றும் பொதுமக்களுக்கானஅனுகூலங்கள் என்பன பற்றி சாய்ந்தமருது பிரதேச செயலக வெளிக்களஉத்தியோகத்தர்களுக்கு அறிவூட்டும் செயலமர்வு நேற்று (16) திங்கட்கிழமை நடைபெற்றது.இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்குஉதவிப் பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஃபர், சமுhத்திதலைமையக முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம், கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுதீன் உள்ளிட்ட சமுர்த்திஅபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்திஉத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றுகையில்,

19வது அரசியலமைப்பு திருத்தத்தில் உருவாக்கப்பட்ட தேசிய பொலிஸ் சேவைஆணைக்குழுவின் பணிகள் மற்றும் பொதுமக்களுக்கான அனுகூலங்கள் என்பன பற்றி இன்றுஅரச உத்தியோகத்தர்களோ, பொதுமக்களோ அறிந்து வைத்துள்ளார்களா? என்ற கேள்வியேஎண்ணுள் எழுகின்றது. இந்நிலைமையினை கருதிற் கொண்டுதான் தேசிய பொலிஸ் சேவைஆணைக்குழுவின் கிழக்கு மாகாணக் காரியாலயம் மக்களுடன் நேரடி தொடர்புடையஉத்தியோகத்தர்களை இலக்காக வைத்து இவ்வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துவருகின்றது.

பொலிஸாரின் செயற்பாட்டில் பொதுமக்கள் அதிருப்தியுடன் இருப்பதை காணக்கூடியதாகவேஉள்ளது. பொலிஸ் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களின் முறைப்பாடுகளை எடுக்காமல்விடுதல், முறைப்பாட்டு பிரதி எடுப்பதில் தாமதம், விசாரணையில் தாமதம் மற்றும் அதிகாரதுஸ்பிரயோகம் போன்ற செயற்பாடுகளினால் பொதுமக்கள் பாதிக்கப்படுமிடத்து தயங்காமல்பொலிஸாருக்கு எதிராக தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யலாம்.

முறைப்பாடுகளை பொதுமக்கள் நேரடியாகவும் செய்யலாம். மக்கள் அஞ்சும் பட்சத்தில்மறைமுகமாகவும் பொலிஸாருக்கு எதிராக முறையிடலாம். முறைப்பாட்டாளரின் தகவல்கள்இரகசியமாக பேணப்படுவுதுடன் விசாரணையின் பின் தீர்ப்பு உரிய நபருக்கு அறிவிக்கப்படும்எனவும் தெரிவித்தார்.

-ஹாசிப் யாஸீன், றியாத் ஏ.மஜீத்