ரணில் பதில் சொல்லியாக வேண்டும்: வாசுதேவ

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் சொல்லியே ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார் வாசுதேவ நானாயக்கார.

குறித்த விவகாரத்தில் ரணிலுக்குத் தொடர்பிருப்பதாகத் தாம் ஆரம்பத்திலிருந்தே தெரிவித்து வந்ததாகவும் அந்த வகையில் ரணில் பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் விளக்கமளிக்கத் தயார் என முன்னர் பிரதமர் கடிதம் மூலம் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.