ரணில் எப்போது விசாரிக்கப்படுவார்? காத்திருக்கும் மஹிந்தானந்த

பிணை முறி மோசடி விவகாரத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசாரணைக்குட்படுத்தப் போகும் நாளை மக்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார் மஹிந்தானந்த அளுத்கமகே.

உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்ற போதிலும் ரணில் விக்கிரமசிங்க எப்போது விசாரிக்கப்படுவார் என மக்கள் காத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரவி கருணாநாயக்க, கபீர் ஹாஷிம், மலிக் சமரவிக்ரம ஆகியோர் ஏலவே விசாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.