ஐந்து வருடங்களுக்குப் பின் தலிபான் பிடியிலிருந்து விடுதலை

2012ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் வைத்து தலிபான் இயக்கத்தினால் கடத்தப்பட்டிருந்த கனடாவைச் சேர்ந்த நபரும் அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளும் ஐந்து வருடங்களுக்குப் பின் தலிபான் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க இராணுவத்தின் ‘துப்பு’ கிடைத்ததன் பின்னணியில் பாகிஸ்தான் படையினர் இம் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் இது அமெரிக்கா – பாகிஸ்தான் உறவின் புதிய அத்தியாயம் என ட்ரம்ப் வர்ணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.