யுனெஸ்கோவிலிருந்து விலகியது அமெரிக்கா!

இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை யுனெஸ்கோ பேணி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள அமெரிக்கா, அவ்வமைப்பிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது.

2011ம் ஆண்டு பலஸ்தீனத்துக்கு யுனெஸ்கோவில் முழு அங்கத்துவம் வழங்கப்பட்டதன் பின்னணியில் அவ்வாண்டில் நிதி வழங்கலை நிறுத்திய அமெரிக்கா, தொடர்ச்சியாக இஸ்ரேல் – பலஸ்தீன விவகாரத்தில் யுனெஸ்கோவுடன் முரண்பட்டு வந்தது.

இந்நிலையில் ஐ.நாவின் தேவையே ‘இல்லை’யெனவும் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்து வந்த டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ் தற்போது முதற்கட்டமாக யுனெஸ்கோவிலிருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.