ஹம்பாந்தோட்டை ‘தாக்குதல்’ பற்றி விசாரணை: பொலிஜ் ஆ. குழு!

நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் கைதான ஒருவர் பொலிஸ் உயரதிகாரியினால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்தப்போவதாக தெரிவித்துள்ளது பொலிஸ் ஆணைக்குழு.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை ஏ.எஸ்.பி. தலுவத்த கன்னத்தில் அறையும் வீடியோ வெளியாகி தற்போது பரபரப்பை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இதுதானா நல்லாட்சியென நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.