தங்கப் பதக்கம் பெற்ற மாவனல்ல சாஹிரா மாணவனுக்கு பாராட்டு

அண்மையில் இந்தோனேசியா, ஜகார்த்தாவில் சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நாடு திரும்பிய மாவனல்ல சாஹிரா மாணவன் அயாசுக்கு பாடசாலையில் விசேட வரவேற்பு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விருது வென்று வந்த மாணவனுக்கு பாடசாலை சார்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-ஜே.எம். ஹபீஸ்