EU வில் சேரும் முயற்சியில் அர்துகானுக்கு ‘சலிப்பு’!

துருக்கியை ஐரோப்பிய யூனியனில் இணைத்துக் கொள்ள வேண்டும் என கடந்த 12 வருடங்களாக போராடி வரும் அர்துகான் இனியும் அது ‘தேவையில்லை’ யென நேற்று நாடாளுமன்றில் வைத்து தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனின் செல்லப்பிள்ளையாக இருக்க கடந்த ஒரு தசாப்தமாக துருக்கி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த அதேவேளை மறு பக்கத்தில் துருக்கியில் ‘இஸ்லாமிய’ ஆட்சியின் மீள் வருகையும் தலைமைத்துவம் எனும் தோற்றப்பாட்டையும் உலகின் ஏனைய பாகங்களுக்கு குறிப்பாக இலங்கை, இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில் வளர்த்து வந்தது.

எனினும், ஐரோப்பிய நிபந்தனைகளையும் நிறைவேற்றுவதன் மூலம் நீண்ட முயற்சியும் மேற்கொண்டு வந்திருந்த நிலையில் நேற்றைய தினம் அர்துகான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிரிய அகதிகள் விடயத்தில் ஐரோப்பிய யூனியனின் ‘வேண்டுகோளுக்காக’ நிதியுதவிக்குப் பகரமாக அகதிகளை எல்லையில் தடுத்து வைக்க இணங்கியிருக்கின்ற போதிலும் அவ்வப்போது ‘எல்லையை’ திறந்து விடப்போவதாக எச்சரிக்கைகளையும் விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.