கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

இலங்கை முஸ்லிம்களின் முன்னோடிப் பாடசாலையான கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நாளை மறுநாள் (15) வெள்ளிக்கிழமை கல்லூரி அதிபர் ரீ. றிஸ்வி மரிக்கார் தலைமையில் பிற்பகல் 2.00 மணிக்கு கல்லூரியின் அப்துல் கபூர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இப்பரிசளிப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து சிறப்பிக்கவுள்ளார். அத்துடன் கௌரவ அதிதியாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், விசேட அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

-எம்.எஸ்.எம்.ஸாகிர்