தானாக ஒப்புக்கொண்ட மஹிந்தவையும் தண்டிக்க முடியும்: ராஜித

அரச நிதியை முறைகேடாக உபயோகித்து சில் துணி விநியோகத்தில் ஈடுபட்ட லலித்தும் அனுஷவும் தமது உத்தரவின் பேரிலேயே அதனை செய்ததாகத் தானாக ஒப்புக்கொள்ளும் மஹிந்த ராஜபக்சவையும் நீதிமன்றில் நிறுத்தி தண்டனை வாங்கித்தர முடியும் என தெரிவித்துள்ளார் ராஜித சேனாரத்ன.

வெலிகடை சென்று தமது சகாக்களை பார்வையிட்டுத் திரும்பிய மஹிந்த இவ்வாறு தானே அதற்கான உத்தரவை வழங்கியிருந்ததாக ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே இதனை அடிப்படையாக வைத்து மஹிந்த ராஜபக்சவுக்கும் தண்டனை வாங்கித் தர முடியும் என ராஜித தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே மஹிந்த இதனைத் தெரிவித்திருந்தால் விடயம் இன்னும் இலகுவாக அமைந்திருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.