லலித் ஜயசிங்க பிணையில் விடுதலை

வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபரை தப்ப வைத்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் டி.ஐ.ஜி லலித் ஜயசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சுவிஸ் குமார் எனும் சந்தேக நபருக்கு உதவிய குற்றச்சாட்டிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்ததோடு பணியிலிருந்தும் நீக்கப்பட்டிருந்தமையும் தந்துர முஸ்லிம் இளைஞனுக்கு பிணை மறுப்பதில் இவரே பிரதான பங்கு வகித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

படம்: பாறுக் ஷிஹான்